வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள வெட் வரி அதிகரிப்பினால் பேக்கரி தொழில்துறையினரும், பேக்கரி உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை எனதீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.