நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 86 பேர் தடுப்புக் காவல் உத்தரவில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 16 கிலோவுக்கு அதிக நிறையுடைய பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.