சமூக ஊடகங்கள் ஊடாக சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நைஜீரிய பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக மூன்று பெண்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.