Date:

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள்: நோயை கட்டுபடுத்த நடவடிக்கை !

மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் 8 கைதிகள் நேற்றிரவு (23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி மாத்தறை பொது வைத்தியசாலையில் தற்போது 16 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , இன்றும் (24) நாளையும் (25) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மூளைக் காய்ச்சல் காரணமாக குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த சுகாதார பிரிவு தீர்மானித்துள்ளது.

அத்துடன் நத்தார் தினத்தன்று கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல கைதிகள் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெருகலில் வௌ்ளம்

வெருகல் பிரதேசம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்தொடங்கியுள்ளது. மன்னம்பிட்டி...

யாழ் -அனுராதபுரம் ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையே ரயில் சேவைகள்...

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும்...

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் – சாந்த பத்மகுமார மீது குற்றச்சாட்டு!

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ்...