சுமார் 5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஆயத்தமாகி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் மற்றும் விசேட நிபுணத்துவ மருத்துவ பிரிவுகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சுமார் 400 மருத்துவமனைகள் மற்றும் விசேட மருத்துவ பிரிவுகள் மூடப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1800 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சேவைக்கு தகுந்த சம்பளம் இன்மை, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, ஆரோக்கியமான தொழில் சூழ்நிலை இல்லாமை, நாட்டில் நிலவிவரும் ஸ்திரமற்ற நிலைமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சுமார் 20 மருத்துவமனைகள் 20 சிறிய மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அ அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.