சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது

சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்று, பணச்சலவையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

நேற்று (05) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

 

 

 

சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை முகாமைத்துவம் செய்து, அந்தத் தடைசெய்யப்பட்ட பிரமிட்ʽ திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த நபர்களின் குற்றவியல் நம்பிக்கையை மீறியது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு இணங்க, நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

 

 

 

இதற்கமைய, பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் செல்வது, பணம் உழைப்பது, மேம்படுத்துவது, பிரபல்யப்படுத்துவது மற்றும் முகாமைத்துவம் செய்வது அத்துடன் அதில் பணத்தை முதலீடு செய்த நபர்களின் குற்றவியல் நம்பிக்கையை மீறியமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

இச்சம்பவம் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சாமர சம்பத்தின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.       சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த...