Date:

இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கொவிட்-19 வைரஸின் வேகமாகப் பரவும் மாறுபாடான JN.1 வைரஸால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் நாட்டில் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மாறுபாடு இந்தியாவின் கேரளாவில் பதிவாகியதையடுத்து, இலங்கையில் சுகாதார அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரோன் JN.1 கொவிட் வைரஸின் புதிய துணை வகையாக அடையாளம் கண்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் கேரளாவில் ஒரு பெண்ணிடம் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய நோயும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அது தொடர்பில் எப்போதும் அவதானம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

JN.1 வைரஸ் திரிபு என்பது மற்ற அனைத்து துணை வகைகளிலிருந்தும் கணிசமாக வேறுபடும், வேகமாக பரவும் திரிபு என்று நிபுணர்கள் தெரிவவித்துள்ளனர்.

இந்த புதிய துணை வைரஸின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு வடிதல், தொண்டை புண், தலைவலி, இரைப்பை குடல் வலி போன்றவையாகும்.

இந்த வைரஸ் மாறுபாடு ஒகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்...

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...