அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாம் மதிப்பாய்வு கூட்டம் நிறைவுற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதிய இலங்கைக்கான கடன் திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிப்படைத்தன்மையுடைய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும் எனவும் சர்வதேச நாணய நிதிய இலங்கைக்கான கடன் திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.