தேசிய கண் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பானது கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.