Date:

புகைத்தல் – மது பாவனை காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்

நாட்டில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மதுசார பாவனை எமது நாட்டிற்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மதுபான நிலையங்களை, திறக்கும் காலத்தை அதிகரிப்பதன் ஊடாக விபத்து மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், இது மதுசாரம் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களின் மறைமுக விளம்பர நோக்காக காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற மதுசார வரித் தொகை 165.2 பில்லியன் ரூபாவாகும்.

இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மதுசார பாவனை காரணமாக அரசாங்கத்திற்கு 237 பில்லியன் ரூபாய் சுகாதாரம் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...