பைஸர் முஸ்தபாவின் 2026 நிதியொதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கி வைப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )

 

பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக, பாடசாலைகளுக்கு மடிக்கணினிகள், மேசைக் கணினிகள் மற்றும் புரொஜெக்டர் வழங்கும் நிகழ்வு, கொழும்பு பிரதேச செயலக அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, கொழும்பு 02 – சாரிபுத்த மகா வித்தியாலயத்திற்கு மடிக்கணினி (Laptop),

கொழும்பு 12 – புனித செபஸ்தியார் தமிழ் வித்தியாலயத்திற்கு மேசைக் கணினி (Desktop Computer),

கொழும்பு 02 – புனித ஜெபமாலை சிங்கள வித்தியாலயத்திற்கு மடிக்கணினிகள்,

கொழும்பு 02 – புனித ஜெபமாலை தமிழ் வித்தியாலயத்திற்கு மடிக்கணினிகள்,

கொழும்பு 10 — மருதானை வீதி வட்டாரம், மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்திற்கு மேசைக் கணினி,

கொழும்பு 02 – மரியம் பஸ் பெண்கள் பாடசாலைக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் பொல்துவ சந்தியில் ஆரம்பம்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கும் (PSTA) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் ஒன்று...

4 ஆம் காலாண்டில் 1.46% மின் கட்டண அதிகரிப்பு?

2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது.     எனினும்...