நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு திறன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என அதன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்தார்.
சாதாரணமாக ஒரு மாதத்திற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவும், போட்டியாளரான நிறுவனத்திற்கு 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுமாக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் தேவைப்படுவதாகவும், தற்போதைய எரிவாயு தேவையைக் கருத்திற்கொண்டு நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் ஜியோ காஸ் (Geo Gas) நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்


