முக்கோண தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று (31) நடைபெறுகிறது.

 

 

 

இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த முக்கோண ஒருநாள் தொடரின் ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து முன்கூட்டியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

 

 

சமீபகாலமாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணி, இந்த முக்கோணத் தொடரில் மீண்டும் எழுச்சி பெற்று, வெற்றித் தாகத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத சில வெற்றிகளைப் பரிசளித்தது.

 

 

 

இலங்கை அணி ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணியின் கனவைத் தகர்த்து முன்கூட்டியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

 

 

இன்று இறுதிப் போட்டி நடைபெறும் லாகூர் மைதானம் இலங்கை அணிக்குச் சாதகமான ஒரு மைதானமாகக் கருதப்படுகிறது.

 

 

இலங்கை அணி இதுவரை இந்த மைதானத்தில் விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது.

 

 

இறுதியாக லாகூர் மைதானத்தில் இலங்கை அணி விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தமையும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.     இன்று பிற்பகல் 1.30...

இறுதிப் போட்டியில் இலங்கை

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்து...