ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 2000-க்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
இதுவரை கிடைத்த தரவுகளின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளதாகவும், சுமார் 20 கிராமங்களில் 1,980 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (07) காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இவை ரிக்டர் அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்று பதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால், ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக சிதைவடைந்தன. 10,000-ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW