Date:

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

இஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதுடன், அதில் 90 வீதமானோர் தாதியர் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இலங்கையர்களின் நிலைமை குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கேட்டறிந்துள்ளார்.

இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை...