Date:

காசாவில் இருந்து உடனே வெளியேறுங்கள் – பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தல்

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
போரை தீவிரப்படுத்த உள்ளதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தினார்.

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல், ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த உள்ளோம் எனவும் அறிவித்துள்ளார். இதனால் காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் இலங்கையின் நிலைமை என்ன?

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று (29) அதிகாலை ஏற்பட்ட...

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...