களுத்துறை மாவட்ட மத்துகம கல்வி வலயத்திற்கு உட்பட கலைமகள் தமிழ் தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின விழா கடந்த 2023.10.06ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் வீ. சசிகுமார் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் வைபவத்தின் போது IDM நேஷன் கெம்பஸின் தலைவர் கலாநிதி ஜனகன் விநியாகமூர்த்தி பிரதம அதிதியாகவும் மற்றும் IDM நேஷன் கெம்பஸின் சர்வதேச செயற்பாடுகளுக்கான சமூக நலத்துறை பணிப்பாளர் அதிவணக்கத்துக்குரிய அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு வைபவத்தை சிறப்பித்தனர்.
இதன்போது IDM நேஷன் கெம்பஸின் தலைவர் கலாநிதி ஜனகன் விநியாகமூர்த்தி ஆசிரியர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்து உரையாற்றினார்.
இவர் தனது உரையினபோது,
மாணவர்கள் எதிர்காலம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் கல்வி தான் மிகவும் முக்கியம் என்றும் எவே மாணவர்கள் நன்றாக கற்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இங்கு பாடசாலை அதிபர் வீ. சசிகுமார் முன்வைத்த பல்வேறு வேண்டுகோள்களையும் கேட்டறிந்த IDM நேஷன் கெம்பஸின் தலைவர் கலாநிதி ஜனகன் விநியாகமூர்த்தி அது தொடர்பாக எதிர்வரும் காலப்பகுதியில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW