Date:

பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) பகல் 12 மணிக்கு முன்னதாக அனைத்து உப ரயில் கட்டுப்பாட்டாளர்களும் உடனடியாக தமக்குரிய பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளரினால் முற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.

உரிய பணியிடங்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாதோர் அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென ரயில்வே பொதுமுகாமையாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவரால் உப ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களால் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று(04) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...