விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படாததால் நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது.