Date:

கலேவெல விபத்தில் இருவர் பலி

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று (24) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஆராச்சிக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் எதிர் திசையில் பயணித்த பேரூந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் 7 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிடியாணை

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடத்திய...