இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் அந்த ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்களால் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹேலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் குறித்த இடத்தை உறுதிப்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.