நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமைஅனுப்பிய கடிதத்தில் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும், அவரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், மன்னிப்புக் கோரி அவ்வாறான கடிதத்தை வழங்குவதற்கு கட்சியின் தலைவருக்கு அதிகாரம் இல்லை என தயாசிறி ஜயசேகர நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி, எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW