யாழ். போதான வைத்தியசாலை விடுதி இல.12 மருத்துவர்கள் மற்றும் தாதியர் ஆகியோரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று (19) மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்தார்.
இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.
வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துவிதமான ஊக்கத்தையும் வழங்குவதாக பாடசாலைச் சமூத்தினர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW