அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சைபர் தாக்குதலினால் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட அரச மின்னஞ்சல் முகவரிகளின் தரவுகள் அழிவடைந்திருந்திருந்தன.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத்தினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW