Date:

விக்டோரியா சரணாலயத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

கண்டி – பதியபெலெல்ல வீதியின் 16 ஆவது கட்டைக்கு அருகிலுள்ள விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்களில் கறை படிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிகுண்டு ஒன்றும் 9 LMG தோட்டாக்களும் 50 மில்லிமீட்டர் விமான எதிர்ப்பு தோட்டாவும் 3 கைக்குண்டுகளும் இந்த வெடிபொருட்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

119 என்ற இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...