சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக வெனிசுலா நாட்டில் இருந்து இளைஞர்கள் பலர் சீனாவில் பயிற்சி பெறவுள்ளதாகவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பின்போது உணவு ஏற்றுமதி, தகவல் தொடர்பு, சுற்றுலா துறை உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW