வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முகவரி மூலம் சமர்ப்பிக்கலாம்,
செயலாளர், பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அல்லது மின்னஞ்சல்: legis_com@parliament.lk மூலம் 12 அக்டோபர் 2023 அல்லது அதற்கு முன்.
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் அமுல்படுத்த வேண்டிய வழிமுறைகளை ஆராய்ந்து அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி சபாநாயகரால் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW