பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நபர், படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் ரயிலில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW