Date:

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

 

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன.

6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.

சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்றைய போட்டி கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும்.

பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கண்டி, பல்லேகலயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் இரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...

Breaking: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. 4 மீட்டருக்கு...