விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பஸ் நிலையத்தில் இருந்து சொகுசு பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை தடை விதித்துள்ளமையால் பஸ் உரிமையாளர்கள் மற்றும் இந்த போக்குவரத்து பாதையை பயணிப்போர் பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW