நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநீர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வோரை அடையாளங்கண்டு, அவர்களுக்கான அடையாள அட்டடைகளை வழங்கவுள்ளதாக கொழும்பு நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனூடாக உணவு பாதுகாப்பு, உத்தியோகபூர்வ ஆடை என்பன தொடர்பில் அவர்களுக்கு தௌிவூட்டி வாய்மொழி மூல கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்குவோருக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டைகள் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.