குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.
குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்காக பொது பக்தர்களின் குழுவும் இணைந்திருந்தது.
அங்கு, சம்பந்தப்பட்ட குழுவினருக்கும், பிக்குகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தற்போது கலவர தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.