Date:

சுகாதார அமைச்சுக்குள் மறைக்கப்படும் மர்மங்கள்

மூன்று மாதங்களில் சுமார் 10 ஒவ்வாமை மரணங்கள் ஏற்படுவது இயல்பானதா என்பதை சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ இந்த விடயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மருந்துப் பாவனையால் நோயாளிகள் உயிரிழந்தமை தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குழு நியமித்து 48 மணித்தியாலங்களின் பின்னர் கம்பஹா வைத்தியசாலையில் மற்றுமொரு நோயாளி மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

Ceftazidime எனும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியின் 11வது ஊசியின் பின்னர் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அது ஒரு போதும் சாதாரண நிலைமை அல்ல எனவும் சுகாதார அமைச்சின் உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பதற்காக வெளியிடும் ஊடக அறிக்கை ஊடாக அமைச்சு மக்களை நகைச்சுசையாக எண்ணியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிலித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம்...