முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
அதன்படி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தியில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது தொடர்பான பட்டச் சான்றிதழை ரஞ்சன் ராமநாயக்க இன்று (12) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.
உயர்தரப் பரீட்சையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்து பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்தார்.
2021 ஆம் ஆண்டு, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டார், அங்கிருந்து அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW