பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 07 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செலுத்தாத காரணத்தினால் வைத்தியசாலையின் மருத்துவ விடுதி, தாதியர் பயிற்சிப் பிரிவு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்க மின்சார சபை நேற்று காலை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நேற்று (10) பிற்பகல் வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாவை செலுத்தியதாகவும், மீதித் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து, மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW