Date:

வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள் – இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கையில் எந்த ஒரு கொவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தினசரி கொவிட்டை தடுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான இலத்திரனியல் சான்றிதழ்களை பெற வருகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகும்.

மேற்கத்திய நாடுகள் பல இன்னமும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கேட்பதனால் வெளிநாடு செல்வதில் கடுமையான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். தற்போது மேற்கத்திய நாடுகளில் புதிய மாறுபாடுகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் தடுப்பூசி இல்லாத ஒரு நிலையில் இந்த மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...

இளஞ்சிவப்பு புதன்கிழமை

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய...

நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர...

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...