Date:

பிறந்த சிசுவை கொன்று வீதியில் வீசிய ஜோடி!

பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய  கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை (8) இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன், சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வீசியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தக் கறைகளைத் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று   ஜோடியை கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...