Date:

அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக நாமல் ட்விட்

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீள வருகைதரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...