Date:

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள் சிக்கினா்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.

பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சாத்தி ஒருவா் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி காணித பாட வினாத்தாளினை வட்சப் ஊடாக ஆசிாியா் ஒருவருக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், ஹேனேகம மஹா வித்தியாலயம் மற்றும் சீதுவ பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

இரண்டு பரீட்சாத்திகள் தமது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி கணித பாட வினாத்தாள்களை தனித்தனியாக ஆசிாியா்களுக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது பரீட்சை கண்காணிப்பாளரால் அந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடா்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளா் லசிக சமரகோன் தொிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...

பொதுஜன பெரமுன விட்டு ரணிலுடன் இணைந்தார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின்...

சாதாரண தர வகுப்புகளுக்குத் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன்...