கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்

கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகளை நவீனமயமாக்கி, அதன் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் அமெரிக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

தெற்காசியாவின் மிக முக்கிய மூலோபாயக் கடல்சார் மையங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தை இலக்கு வைத்து இந்த டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

 

 

இதன் மூலம் துறைமுகச் செயற்பாடுகளுக்காக மேம்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

 

 

புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன் சரக்குக் கையாளுதல் மற்றும் செயலாக்கச் செயல்முறைகள் மேலும் விரைவுபடுத்தப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

 

அத்துடன், கப்பல் போக்குவரத்து தாமதங்களைக் குறைக்கவும், வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகளைக் குறைத்து அவர்களுக்குச் சலுகைகளை வழங்கவும் இதன் மூலம் முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

இந்த முதலீட்டின் மூலம் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களும் தங்கியுள்ள விநியோகச் சங்கிலிகள் மேலும் வலுவடையும்.

 

 

 

மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு அமெரிக்கத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதன் மூலம் சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்தவும், வர்த்தக போக்குகளை முறைப்படுத்தவும், இரு நாடுகளின் பொருளாதாரங்களையும் பலப்படுத்தவும் வழிவகுக்கும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதர் எரிக் மேயர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

இத்திட்டம் துறைமுகத்தின் திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தக மற்றும் வியாபார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு தீர்மானமிக்க நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில்...

நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை

நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்...