மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

 

 

 

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

 

 

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

 

 

எனினும் சுயவிருப்பின் ​போில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய நிலையில் மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்

கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகளை நவீனமயமாக்கி, அதன் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் அமெரிக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக...

நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை

நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்...