நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை

நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator) தெரிவித்துள்ளது.

 

 

குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணையக்குழுவுக்கும் (PUCSL) அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்சன தெரிவித்தார்.

 

 

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை குறித்த அறிக்கையின் ஊடாகப் பரிந்துரைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில்...

கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்

கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகளை நவீனமயமாக்கி, அதன் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் அமெரிக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக...