Date:

பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.

இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண பொலிஸ் துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதி

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு...

கிராம சேவகர்கள் சுகயீன விடுமுறையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை...

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...