ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பிரான்ஸ் மிர்சா ஆசிப் ஜரால், பிரான்சின் மின்ஹாஜ்-உல்-குரானில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் சமூகம் மற்றும் பிரான்சில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்களும் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மிர்சா ஆசிப் ஜரால், இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரில், இந்தியப் படையினர் காஷ்மீரிகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளனர் என்றும், அங்கு தினசரி மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறினார்.
மேலும், ஸ்ரீநகரில் ஜி20 மாநாட்டை நடத்துவதன் மூலம் இந்தியா உலகை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது.
ஒகஸ்ட் 5, 2019 இன் இந்திய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, அங்கு மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, மனித உரிமைகள் கடுமையான மீறல்கள் நாளாந்தம் அரங்கேற்றப்படுகின்றன.
காஷ்மீர் மக்களின் குரலை எழுப்புவதும், குறித்த மக்கள் மீதான அட்டூழியங்களை அம்பலப்படுத்துவதும் வெளிநாடுகளில் உள்ள காஷ்மீரி மற்றும் பாகிஸ்தானிய சகோதர சகோதரிகளின் பொறுப்பு என்று மிர்சா ஆசிப் ஜரால் கூறினார்.