வெல்லவாய – தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்தசம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளதுடன், கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.