இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கி –
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316.41 ரூபாவில் இருந்து 313.52 ரூபாவாக குறைந்துள்ளது.
விற்பனை விலையானது 339.19 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி –
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 315 ரூபாவிலிருந்து 313 ரூபாவாக குறைந்துள்ளது.
அத்துடன் விற்பனை விலை 330 ரூபாவில் இருந்து 328 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி-
அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 311.76 ரூபா மற்றும் 330 ரூபாவாக மாறாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.