அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மொரட்டுவ-சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பின் இடம்பெற்றுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.
சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த (24) வயதுடைய மீனவரே இவ்வாறு பாரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் உறவினர்களான மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இவர் அதிகாலை 2 மணியளவில் மரண இல்லத்திற்குச் செல்வதற்காக கூறிவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலுள்ளவர்களின் நித்திரைக்கு பாதகம் ஏற்படாதவாறு 3ஆவது மாடியின் ஜன்னல் வழியாக குறித்த நபர் வீட்டிற்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது சம்பவம் விபத்தா? அல்லது கொலையா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.