அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென 100 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலரின் பெறுமதி 236.81 ரூபாவாக காணப்பட்டது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக கூகுள் தரவுகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், தற்போது மீண்டும் கூகுள் தரவு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் பழைய தரவுகளின் படி காட்டுகின்றது.