நுகேகொடை – மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் குறித்த பகுதயில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏராளமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முன்னணி செயற்பாட்டாளர்களான டனிஸ் அலி, அனுருத்த பண்டார, மற்றும் சுதார ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.