Date:

நிந்தவூரில் இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை

நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான பிரதேச சபையின் பழைய கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் பன்னை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான வர்த்தக கட்டிட தொகுதியினை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டிடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கான முன்னெடுப்புக்களின் ஓர் அங்கமாக நேற்று (29) அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆனையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி அவர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் அழைத்து வந்து பார்வையிட்டிருந்தனர்.

இதன் போது இராணுவ உயர் அதிகாரி , அம்பாறை பிராந்திய பிரதி பொலிஸ் அத்தியட்சகர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் கெளரவ முன்னாள் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...